Tuesday, 11 July 2017

நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள 422 நில அளவர் பணியிடங்கள் நிரப்பப்படும் சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்


நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள 422 நில அளவர் பணியிடங்கள் நிரப்பப்படும் சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் | நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள 422 நில அளவர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சட்டசபையில் வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:- வீடற்ற ஏழை மக்களுக்கு 2017-2018-ம் நிதியாண்டில் 3 லட்சத்து 50 ஆயிரம் வீட்டுமனைப் பட்டாக்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் வழங்கப்படும். இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இனிவரும் காலங்களில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் விவசாய வருமானச் சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்புத் திருமணச்சான்றிதழ், விதவைச்சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், குடி பெயர்வு சான்றிதழ், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், திருமணமாகாதவர் என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வசிப்பிடச்சான்றிதழ், சொத்துமதிப்பு சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். விவசாயிகள் பயிர்க்கடன், பயிர்காப்பீடு, இழப்பீடு நிவாரணம் ஆகிய தேவைகளுக்கு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது இணையதளத்திலிருந்து நேரடியாகவே அடங்கல் நகலினை பதிவிறக்கம் செய்து பயன்பெற இந்த இ-அடங்கல் முறை பெரிதும் உதவும். அடங்கல் தொடர்பான விவரங்களை பார்வையிடுவதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால் பதிவிறக்கம் செய்ய சிறு கட்டணம் நிர்ணயிக்கப்படும். விவசாயிகள் இணையதளத்தின் மூலம் ஒத்திசைவு செய்யப்பட்ட அடங்கல் குறித்த பதிவு விவரங்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் எளிமையாகவும், விரைவாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சாதி சான்றிதழ்களை பொதுமக்களும் குறிப்பாக பள்ளி மாணவர்களும் மேலும் விரைவாகவும் எளிதாகவும் பெறவேண்டும், என்ற நோக்கில் முதற்கட்டமாக தற்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களின் குடும்பத்தில் எவரேனும் ஏற்கனவே இணையவழி மின்னணு சேவை மூலமாக சாதிச்சான்று பெற்றிருப்பின் அதன் விவரத்துடன் இ-சேவை மையங்கள் மூலமாக விரைவுச்சேவை கட்டணமாக ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கும் பட்சத்தில் விண்ணப்பித்த நேரத்திலிருந்து 48 மணிநேரத்திற்குள் (விடுமுறை தினங்கள் நீங்கலாக) சாதிச்சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment