Monday, 8 May 2017

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு இலவச வகுப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு இலவச வகுப்பு | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ போட்டித் தேர்வுக்கு சென்னை பெருங்குடியில் நடைபெறும் கட்டணமில்லா 3 மாத சிறப்பு பயிற்சி வகுப்புக்கு தேர்வர்கள் அழைக்கப்படுகிறார்கள். தமிழக அரசின் 41 துறைகளில் உள்ள 1953 காலிப்பணியிடங் களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு நடக்கிறது. நேர்முகத் தேர்வு இல்லாத இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 26-ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6-ம் தேதி தேர்வு நடக்கிறது. இந்த போட்டித் தேர்வுக்காக சென்னையில் நீர்வழி அமைப்பின் சார்பில் கட்டணமில்லா சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 291, பர்மா காலனி 4-வது பிரதான சாலை, பெருங்குடி, சென்னை என்ற முகவரியில் நேற்று முதல் இந்த வகுப்புகள் தொடங்கின. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும். தொடர்ந்து 3 மாதங் களுக்கு நடைபெறும் இந்த கட்ட ணமில்லா வகுப்பில் ஆர்வமுள்ள தேர்வர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 94444 53588, 8056176788, 9840089865, 9543322147 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment