Thursday, 27 April 2017

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு முகாம்.


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு முகாம் | சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜி4எஸ் செக்யூரிட்டி சொல்யூஷன் என்ற தனியார் நிறுவனத்தில் 1,750 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்வதற்காக சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (பொது) வேலைவாய்ப்பு முகாம் 28-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், தேர்ச்சி பெறாதவர்களும் (ஆண்கள் மட்டும்) இப்பணிக்கு தகுதியுடையவர் ஆவர். வயது 19 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் 28-ம் தேதி காலை 11 மணிக்கு அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment