Wednesday, 19 April 2017

2,119 காலியிடங்களை நிரப்ப முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2-ந்தேதி நடக்கிறது | ஆயிரத்து 137 காலியிடங்களை நிரப்ப பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அறிவிக்கை ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்படும்.கல்லூரி உதவி பேராசிரியர் பதவியில் ஆயிரத்து 883 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கான தேர்வு அறிவிக்கை ஜூலை 4-வது வாரத்தில் வெளியிடப்படும்.


2,119 காலியிடங்களை நிரப்ப முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2-ந்தேதி நடக்கிறது | ஆயிரத்து 137 காலியிடங்களை நிரப்ப பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அறிவிக்கை ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்படும்.கல்லூரி உதவி பேராசிரியர் பதவியில் ஆயிரத்து 883 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கான தேர்வு அறிவிக்கை ஜூலை 4-வது வாரத்தில் வெளியிடப்படும்.


2017-ம் ஆண்டில் நடத்தப்படும் பல்வேறு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சார்ந்த 6,390 பணியிடங்களுக்கான தேர்வுகளின் விவரங்கள் அடங்கிய அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார். அதை பள்ளி கல்வித்துறை அரசு செயலாளர் த.உதயச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் காகர்லா உஷா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

2 ஆயிரத்து 119 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப ஜூலை 2-ந்தேதி, எழுத்து தேர்வு நடைபெறுகிறது. தேர்வு தேதிகள் பட்டியல் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சார்ந்த 6 ஆயிரத்து 390 பணியிடங்களுக்கான பல்வேறு தேர்வு விவரங்கள் அடங்கிய பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார். அப்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் காகர்லா உஷா ஆகியோர் உடனிருந்தனர். அந்தப் பட்டியலின் விவரம் வருமாறு:- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (பி.ஜி. அசிஸ்டண்ட்) பிரிவில் 2 ஆயிரத்து 119 காலியிடங்கள் உள்ளன. இதை நிரப்புவதற்கான அறிவிக்கை மே 2-வது வாரத்தில் வெளியிடப்படும். ஜூலை 2-ந்தேதி தேர்வு நடந்து, ஆகஸ்டு மாதம் தேர்வு முடிவு வெளியிடப்படும். பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) விரிவுரையாளர் பணியிடங்கள் ஆயிரத்து 137 காலியாக உள்ளன. இந்த காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். ஆகஸ்டு 13-ந்தேதியன்று தேர்வு நடத்தப்படும். அக்டோபரில் தேர்வு முடிவுகள் வெளியாகும். வேளாண்மை கல்வி சிறப்பு ஆசிரியர்கள் பதவியில் ஆயிரத்து 188 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கான அறிவிக்கை ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 19-ந்தேதி அன்று தேர்வு நடத்தப்படும். நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். வேளாண்மை கல்விப் பாடம் பயிற்றுவிப்போர் (இன்ஸ்ட்ரக்டர்) பதவியில் 25 இடங்கள் காலியாக உள்ளன. அதற்கான தேர்வு அறிவிக்கை ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 20-ந்தேதி அன்று தேர்வு நடத்தப்பட்டு, நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். உதவி பேராசிரியர் இடங்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பதவியில் ஆயிரத்து 883 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கான தேர்வு அறிவிக்கை ஜூலை 4-வது வாரத்தில் வெளியிடப்படும். செப்டம்பரில் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பிரிவில் 38 இடங்கள் காலியாக உள்ளன. அதற்கான தேர்வு அறிவிக்கை ஆகஸ்டு 2-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, செப்டம்பர் 30-ந்தேதியில் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும். டெட் தேர்வு டெட் தேர்வின் முதல் தாளுக்கான தேர்வு இந்த மாதம் 29-ந்தேதி நடத்தப்படும். இரண்டாம் தாளுக்கான தேர்வு 30-ந்தேதி நடத்தப்படும். அந்தத் தேர்வுகளின் முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment