Monday, 2 January 2017

www.northerncoalfields.gov.in | நிலக்கரி நிறுவனத்தில் 201 பணிகள்

நிலக்கரி நிறுவனத்தில் 201 பணிகள் | நிலக்கரி நிறுவனத்தில் 201 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங் களில் ஒன்று 'நார்தன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட். சிங்க்ராவ்லி என்ற இடத்தில் செயல்படும் இந்த நிலக்கரி நிறுவனத்தில் தற்போது ஜூனியர் ஸ்டெனோகிராபர், .டி.. எலக்ட்ரீசியன், எச்..எம்.எம். ஆபரேட்டர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 201 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் எச்..எம்.எம். ஆபரேட்டர் பணிக்கு 159 இடங்களும், எலக்ட்ரீசியன் பணிக்கு 13 இடங்களும், ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு 29 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர் 30-10-2016-ந் தேதியில் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியானவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் .பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், இந்தி, ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தெரிந்தவர்கள் ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் .டி.. எலக்ட்ரீசியன் படித்தவர்கள் எலக்ட்ரீசியன் பணிக்கும், பிட்டர், டீசல்-மோட்டார் மெக்கானிக் படித்தவர்கள் எச்..எம்.எம். ஆபரேட்டர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறமைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம் : விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், துறை ஊழியர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அதில் தேவையான இடங்களில் புகைப்படங்கள் ஒட்டுவதுடன், குறிப்பிட்ட சான்றிதழ்கள், இணைப்புகளை இணைத்து அனுப்ப வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் General Manager (P/ MP&R), Room No. 15, Personnel Department, NCL HQ, Singrauli, MP 486 889 என்ற முகவரிக்கு 7-1-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். இது பற்றிய விரிவான விவரத்தை www.northerncoalfields.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.




No comments:

Post a Comment