Monday, 9 January 2017

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்| இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய எண்ணெய்க் கழக நிறுவனமான இந்தியன் ஆயில் (..சி.எல்.) பிரபல பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். வடக்கு மண்டலத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு டெக்னீசியன் அப்ரண்டிஸ், டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கு 128 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பாங்காய்கான் சுத்திகரிப்பு ஆலையில் நிர்வாக அதிகாரி சாராத அதிகாரி பணியிடங்களுக்கு 56 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அசாம் திக்பாய் சுத்திகரிப்பு ஆலையில் 15 ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை தவிர கேட் தேர்வின் அடிப்படையில் கிராஜுவேட் என்ஜினீயர் பணிக்கும் ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்... அப்ரண்டிஸ் பயிற்சி ..சி.எல். நிறுவனத்தின் வடக்கு மண்டல பகுதிகளான டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் டெக்னீசியன் அப்ரண்டிஸ் மற்றும் டிரேடு அப்ரண்டிஸ் பணிக்கு 128 பேர் சேர்க்கப்படுகிறார்கள். 24 வயதுக்கு உட்பட்ட, 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளை படித்த விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், விருப்பமானவர்கள் www.iocrefrecruit.in என்ற இணையதளம் வழியாக 12-1-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை அந்த இணையதளத்தில் பார்க்கலாம். 56 ஜூனியர் என்ஜினீயர் பணிகள் அசாம், பாங்காய்கான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நிர்வாக அதிகாரி பணி சாராத ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு 56 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். புரொடக்சன், எலக்ட்ரிக்கல், பயர்சேப்டி, இன்ஸ்ட்ருமென்டேசன், பி.அண்ட் யு ஆகிய பிரிவுகளில் பணிகள் உள்ளன. 26 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள், 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை 23-1-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கிராஜூவேட் என்ஜினீயர் ..சி.எல். நிறுவனத்தில், கேட் 2017 தேர்வின் அடிப்படையில் கிராஜுவேட் என்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 26 வயதுக்கு உட்பட்ட என்ஜினீயரிங் பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் ஏற்கனவே கேட் 2017 தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பது அவசியமாகும். அந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விருப்பம் உள்ளவர்கள் www.iocl.com என்ற இணையதளம் வழியாக 4-2-2017-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை அந்த இணையதளத்தில் பார்க்கலாம்.



No comments:

Post a Comment