Sunday, 8 January 2017

அலுவலக காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அலுவலக காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | சென்னை மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகத்தில், ஒரு நிரந்தர முழு நேர காவலர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்தை நிரப்ப மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் நேரடி விண்ணப் பதாரர்களுக்கு நேர்காணல் வாயிலாக பணி நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 35 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு 10 ஆண்டுகள் தளர்த்தப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை புள்ளியியல் துணை இயக்குநர், சென்னை மாவட்டம், எண்.359, இணைப்புக் கட்டிடம், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை- 600006 என்ற முகவரிக்கு, ஜனவரி 25-ம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment