Monday, 9 January 2017

துணை ராணுவத்தில் 872 வேலைகள் டிப்ளமோ படிப்பு தகுதி

துணை ராணுவத்தில் 872 வேலைகள் டிப்ளமோ படிப்பு தகுதி | துணை ராணுவத்தில் 872 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. .டி.., டிப்ளமோ மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்று சாஸ்திரா சீமா பல். உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த படைப்பிரிவில் தற்போது 'குரூப்-பி' மற்றும் 'குரூப்-சி' தரத்திலான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. மொத்தம் 872 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பணி வாரியாக சப்இன்ஸ்பெக்டர் (கம்யூனிகேசன்) பணிக்கு 16 பேரும், அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 110 பேரும், ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு 746 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 18 முதல் 25 வயதுடையவர்களும், ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு 23 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனு மதிக்கப்படும். கல்வித்தகுதி: சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் என்ஜினீயரிங் பட்டப்படிப்புகள் மற்றும் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற அறிவியல் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மெட்ரிக் தேர்ச்சியுடன், எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவியல் பிரிவுகளை தேர்வு செய்து பிளஸ்-2 படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெட்ரிக் தேர்ச்சியுடன், .டி.. எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்கள் ஹெட்கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல் பிரிவுகளை தேர்வு செய்து பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. கட்டணம்: சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.200-ம், மற்ற பணி விண்ணப்பதாரர்கள் ரூ.100-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தேர்வு செய்யும் முறை: உடல் அளவு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். தேவையான இடத்தில் புகைப்படங்கள் ஒட்டுவதுடன், கட்டண டி.டி. மற்றும் சான்றிதழ் நகல்கள், புகைப்படங்கள் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு டிசம்பர் 30- ஜனவரி 6 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களை அந்த இதழில் பார்க்கலாம்.



No comments:

Post a Comment