Sunday, 22 January 2017

இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 26-ம் தேதி முதல் தொடக்கம்

இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 26-ம் தேதி முதல் தொடக்கம் | நான்கு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளுக்கு ஜன.26 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் தொடங்கவுள்ளன. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன. எஸ்சி / எஸ்டி மற்றும் பொருளாதார நலிவுற்றவர்க ளுக்காக இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. திறமையான பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்ற 800-க்கும் மேற்பட்டோர் வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே மற்றும் மத்திய, மாநில அரசுப் பணிகளில் அமர்ந்துள்ளனர். இந்நிலையில் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. இதன்படி போட்டித் தேர்வுகள் நடத்தி நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளன. இதனால் வரும் ஜன.26 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. தொடக்க நிகழ்ச்சியில் நேஷனல் இன்சூரன்ஸ் மண்டல துணைப் பொதுமேலாளர் பார்கவா, நியு இந்தியா அஸ்யூ ரன்ஸ் மண்டல மேலாளர் நல்லசி வன், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மண்டல அஜித்குமார், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மண்டல மேலாளர் ஜோதி பிரசாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி சிஐடியு அலுவலகம், 7, கச்சாலீஸ்வரர் கோயில் அக்ரஹாரம், (ஆர்மீனியன் தெரு வழி) பாரிமுனை, சென்னை என்ற முகவரியில் நடைபெறுகிறது. வகுப்பில் சேர்வது குறித்த விவரங்களுக்கு 94449 28162, 97911 16753, 94861 11001, 94440 30745 94449 82364, 94442 14696 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment