Monday, 9 January 2017

பட்டதாரி என்ஜினீயர்களுக்கு 1319 பணியிடங்கள்

பட்டதாரி என்ஜினீயர்களுக்கு 1319 பணியிடங்கள் | நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 1319 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. என்ஜினீயர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று கோல் இண்டியா லிமிடெட். பல்வேறு இடங்களில் நிலக்கரி சுரங்கங்களை கையாளும் இந்த நிறுவனத்தில் தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1319 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக மைனிங் - 191, எலக்ட்ரிக்கல்- 198, மெக்கானிக்கல் - 196, சிவில் - 100, நிதி-கணக்கு - 257, எச்.ஆர். - 134 பணியிடங்கள் உள்ளன. இவை தவிர பப்ளிக் ரிலேசன்ஸ், ராஜ்பாஷா, சேல்ஸ் மார்க்கெட்டிங், மெட்டீரியல் மேனேஜ்மென்ட், .டி., இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், மெட்டீரியல் மேனேஜ்மெண்ட், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளிலும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-12-2016-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், .பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: பி.., பி.டெக், பி.எஸ்சி. (என்ஜினீயரிங்), எம்.சி.., எம்.எஸ்சி., எம்.டெக் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வு செய்யும் முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம் : பொது மற்றும் .பி.சி. பிரிவினர் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 3-2-2017-ந் தேதியாகும். ஆன்லைன் தேர்வு 26-3-2017 அன்று நடத்தப்படுகிறது. இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.coalindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.



No comments:

Post a Comment