Monday, 12 December 2016

வங்கியில் பியூன் பணியிடங்கள்

வங்கியில் பியூன் பணியிடங்கள் | பிரபல வங்கியான பரோடா வங்கியில் கடைநிலை ஊழியர்களுக்கான பணிச்சேர்க்கை அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் துப்புரவு பணியாளர் மற்றும் பியூன் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பியூன் பணிக்கு தமிழ்நாட்டில் 35 பணியிடங்களும், புதுச்சேரியில் ஒரு இடமும் உள்ளது, துப்புரவு பணியாளர்-பியூன் பணிக்கு தமிழகத்தில் 155 இடங்களும், புதுச்சேரியில் 2 இடங்களும் உள்ளன. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22-11-2016 தேதியில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியைப் பேச, எழுத படிக்கத் தெரிந்தவர்களாக இருப்பதுடன், ஆங்கிலம் அறிந்திருப்பது கூடுதல் தகுதியாக கொள்ளப்படும். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 27-12-2016-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது பற்றிய விரிவான விவரங்களை www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment