Monday, 5 December 2016

டிப்ளமோ படித்தவர்களுக்கு உருக்காலையில் வேலை

டிப்ளமோ படித்தவர்களுக்கு உருக்காலையில் வேலை | உருக்கு ஆலை நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய உருக்கு ஆணையம் சுருக்கமாக செயில் (SAIL) என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின், பொக்காரோ கிளையில் தற்போது ஆபரேட்டர் மற்றும் அட்டன்டன்ட் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 126 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 84 இடங் களும், அட்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு 42 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் கீழே தரப்படுகிறது... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 17-12-2016-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், .பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித் தகுதி: மெட்ரிக்குலேசன் தேர்ச்சியுடன் 3 ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணியிடங்களும், மெட்ரிக் படிப்புடன் .டி.. படித்தவர்கள் அட்டன்ட் கம் டெக்னீசியன் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறமைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம்: பொது மற்றும் .பி.சி. பிரிவினர் ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், துறை ஊழியர்கள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17-12-2016-ந் தேதி. இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்துக் கொள்ளவும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sail.co.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.



No comments:

Post a Comment