Monday, 5 December 2016

கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை

கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை | இந்திய கடலோர காவல்படையில் 'உதவி கமாண்டன்ட்' வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆயுதப் படையின் ஒரு அங்கமான இது கடற்கரை மற்றும் கடலோர வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. தற்போது இந்த படைப்பிரிவில் 'குரூப்-சி' பிரிவின் கீழ் வரும் 'நான் கெசட்டடு அதிகாரி' தரத்திலான 'உதவி கமாண்டன்ட்' வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. அசிஸ்டன்ட் கமாண்டன்ட் - 02-2017 சேர்க்கையின் படி ஜெனரல் டியூட்டி, ஜெனரல் டியூட்டி பைலட், தொழில்நுட்ப பிரிவு, பைலட், சட்டப்பிரிவு போன்ற பிரிவில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பட்டப்படிப்பு படித்த, இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: ஜெனரல் டியூட்டி, தொழில்நுட்ப பிரிவு, சட்டப்பிரிவு பணி விண்ணப்பதாரர்கள் 1-7-1992 மற்றும் 30-6-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஜெனரல் டியூட்டி பைலட் மற்றும் பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1-7-1992 மற்றும் 30-6-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த தகுதி தேதிகளில் பிறந்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்களே. கல்வித்தகுதி: பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி மற்றும் ஜெனரல் டியூட்டி (பைலட்) பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். டெக்னிக்கல் பிராஞ்ச் பிரிவு விண்ணப்பதாரர்கள் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவு என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் 12-ம் வகுப்பில் இயற்பியல், கணித பாடங்களில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 12-ம் வகுப்பில் இயற்பியல் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 60 சதவீத மதிப்பெண்களுடன் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர்கள் சட்டப் பிரிவு பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்களுக்கு நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் வழியாக 10-12-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். சட்டப்பிரிவு பணிக்கு மட்டும் 14-12-2016 முதல் 18-12-2016-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணைய தளத்தில் பார்க்கலாம்.



No comments:

Post a Comment