Monday, 5 December 2016

மின்சார நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

மின்சார நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி | பல்வேறு நிறுவனங்கள் இளம் வேலை தேடுபவர்களுக்கு அப்ரண்டிஸ் எனும் பயிற்சிப் பணியிடங்களை அறிவிக்கின்றன. இந்த பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெறுபவர்கள் எளிதில் வேலைவாய்ப்பை பெற முடியும். தற்போது சட்லஜ் ஜல் வித்யுத் நிகம் (SJVN) எனப்படும் பொதுத்துறை மின்சார நிறுவனத்தில் பட்டதாரிகள், டிப்ளமோ மற்றும் .டி.. படித்தவர்களுக்கு 201 பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பட்டதாரிகளுக்கு 51 இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 30 இடங்களும், .டி.. படித்தவர்களுக்கு 120 இடங்களும் உள்ளன. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், என்ஜினீயரிங்/ தொழில்நுட்ப படிப்புகளில் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் .டி.. படித்தவர்களுக்கு பணி உள்ளது. விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 13-12-2016-ந்தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தின் நகலுடன், கட்டண டி.டி. மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 23-12-2016-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.sjvn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.



No comments:

Post a Comment