Monday, 12 December 2016

கடற்படையில் மாலுமி சேர்க்கை

கடற்படையில் மாலுமி சேர்க்கை | இந்திய கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களை மாலுமி பயிற்சியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. 142-வது மாலுமி (ஆர்டிபீசர் அப்ரண்டிஸ்) பயிற்சி சேர்க்கையின் கீழ், தகுதியானவர்களை சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பிளஸ்-2 படித்த திருமணமாகாத இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் படித்து பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 1-8-1997 மற்றும் 31-7-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட உடல்தகுதி அவசியம்.


விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 19-12-2016-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 26-12-2016-ந் தேதிக்குள் நகல் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இவை பற்றிய விரிவான விவரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி: www.joinindiannavy.gov.in

No comments:

Post a Comment