Monday, 12 December 2016

எல்லைக்காவல் படையில் பணி

எல்லைக்காவல் படையில் பணி | எல்லைக் காவல் படை சுருக்கமாக பி.எஸ்.எப். என அழைக்கப்படுகிறது. புதுடெல்லியில் செயல்படும் இதன் தலைமை இயக்குனரகத்தில் இருந்து தற்போது உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ) மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டெனோ பணிக்கு 36 பேரும், ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு 121 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 157 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2017 தேதியில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அத்துடன் உதவி சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் குறிப்பெடுக்கவும், அதை குறித்த நேரத்திற்குள் தட்டச்சு செய்யவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஹெட் கான்ஸ்டபிள் விண்ணப்பதாரார்கள் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யத் தெரிந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் முதலில் எழுத்து தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடல்அளவு தேர்வு நடைபெறும். பின்னர் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து திறன் சோதிக்கப்படும். இறுதியில் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு டிசம்பர் 3-9 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பங்களை பதிவிறக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bsf.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment