Monday, 12 December 2016

கப்பல் தளத்தில் 476 பணியிடங்கள் பிளஸ்-2, டிப்ளமோ படிப்பு தகுதி | கடைசி நாள் : 20.12.2016

கப்பல் தளத்தில் 476 பணியிடங்கள் பிளஸ்-2, டிப்ளமோ படிப்பு தகுதி | மும்பை கப்பல் தளத்தில் 476 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- 'மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்' எனப்படும் கப்பல்கட்டும் நிறுவனம் மும்பையில் செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனமான இதில் தற்போது டெக்னிக்கல் மற்றும் ஆபரேட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 468 பணியிடங்கள் உள்ளன. இதில் 420 தற்போதைய பணியிடங்களாகும். மற்றவை பின்னடைவுப் பணிகளாகும். எலக்ட்ரீசியன், கிரேன் ஆபரேட்டர், பெயிண்டர், கார்பெண்டர், மெஷினிஸ்ட், ரிகர், மெடிக்கல் அசிஸ்டன்ட், பைப் பிட்டர், டிராப்ட்ஸ்மேன், பிட்டர், எலக்ட்ரானிக் என பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு:- வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-4-2016 தேதியில் 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித் தகுதி: டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டிப்ளமோ நர்சிங், ஐ.டி.ஐ. படித்தவர்கள், பிளஸ்-2 படித்தவர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் என பல தரப்பினருக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் திறமைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கட்டணம் : விண்ணப்பதாராக்ள் மொத்தம் ரூ.140 கட்டணம் (வங்கிச் சேவைக் கட்டணம் உள்பட) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும். விண்ணப்பம் DGM (HRRec.NE), Recruitment Cell, Service Block 3rd Floor, Mazagon Dock Shipbuilders Limited, Dockyard Road, Mumbai-400010 என்ற முகவரிக்கு 20.12.2016 தேதிக்குள் சென்றடைய வேண்டும். விரிவான விவரங்களை www.mazdock.com என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment