Monday, 12 December 2016

வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி | கடைசி நாள் : 17-12-2016

வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி | மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம் குஜராத்தில் செயல்படுகிறது. தற்போது இந்த கல்வி மையத்தில் கல்லூரி முதல்வர், பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிக்கு 66 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 18 பணியிடங்கள் பின்னடைவு பணியிடங்களாகும். வேளாண் சார்ந்த முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.
விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விரைவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் 17-12-2016-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய முழுமையான விவரங்களை www.aau.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment