Monday, 12 December 2016

விமான நிறுவனத்தில் வேலை | நேர்காணல் 16-12-2016

விமான நிறுவனத்தில் வேலை | ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை அமைப்பான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் மும்பை கிளையில் கஸ்டமர் ஏஜெண்ட் மற்றும் ஜூனியர் கஸ்டமர் ஏஜெண்ட் பணிக்கு 112 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 1-12-2016 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். குறைந்தபட்சம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று, 6 மாத பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.


விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, ரூ.500-க்கு டி.டி. எடுத்து இணைத்து, தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் 16-12-2016-ந் தேதி, மும்பை அந்தேரியில் உள்ள ஏ.ஐ.ஏ.டி.எஸ்.எல். நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது. முழுமையான விவரங்களை http://www.airindia.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment