Monday, 7 November 2016

இந்த வார வேலைவாய்ப்பு ...உங்களுக்காக ...

செயற்கை உறுப்பு மையம் :
செயற்கை மூட்டுகள் தயாரிப்பு கழக நிறுவனம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் செயல்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி உபகரணங்கள், எந்திர உறுப்புகளை தயாரித்து வழங்கும் இந்த நிறுவனத்தில் அதிகாரி மற்றும் அலுவலக பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 31 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியின் விவரம், அதற்கு தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை www.alim.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பம் 30-11-2016-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

ரெயில்வே:
கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் விளையாட்டுவீரர்களுக் கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் 21 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பிளஸ்-2 படிப்புடன், விளையாட்டில் குறிப்பிட்ட அளவு சாதனை படைத்தவர்களுக்கு பணி உள்ளது. இது பற்றிய விவரங்களை அக் டோபர் 29-ந் நவம்பர்4-ந் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கலாம். விண்ணப்பம் 28-11-2016-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

பல்கலைக்கழகம்:
அஜ்மீரில் உள்ள மகரிஷி தயானந்த் சரஸ்வதி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 22 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரங்களை www.mdsuajmer.ac.in, www.mdsuexam.org ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 10-11-2016, நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 15-11-2016-ந் தேதி.

விமான நிறுவனம் :
விமான போக்குவரத்து நிறுவனத்தின் சப்தர்ஜங் விமான நிலையத்தில் பொது இயக்குனர், இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர், பாதுகாப்பு விசாரணை அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு 17 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரங்களை www.civilaviation.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். அறிவிப்பில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு அக்டோபர் 29- நவம்பர் 4-ந் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பைரெயில்வே:
மும்பையை மையப்படுத்தி செயல்படும் ரெயில்வேயின் துணை அமைப்பு, மும்பை ரெயில் விகாஸ் கார்ப்பரேசன். இந்த நிறுவனத்தில் 2017 கேட் தேர்வின் அடிப்படையில் 34 அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. என்ஜினீயரிங் பட்டதாரிகள் இது பற்றிய விவரங்களை www.mrvc.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 30-11-2016-ந் தேதி.

பாதுகாப்புத் துறை:
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லக்னோ மத்திய கமாண்டிங் அலுவலகத்தில் சப் டிவிசனல் ஆபீசர் பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரங்களை அக்டோபர் 15-21 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை 15-11-2016-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.



No comments:

Post a Comment