Monday, 14 November 2016

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் அதிகாரி பணி

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் அதிகாரி பணி | ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணி அறிவிக்கப்பட்டுள்ளது.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வரு கிறார்கள். தற்போது 125-வது தொழில்நுட்ப பட்டதாரிகள் நுழைவு சேர்க்கையில் பட்டப்படிப்பு படித்த தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இந்த பயிற்சியில் 40 பேர் சேர்க்கப்படுகிறார்கள். திருமணமாகாத, இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்கள் இதில் சேரலாம். இதில் சேர்வதற்கான இதர தகுதிகளை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-1-2017 தேதியில் 20 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-7-1990 மற்றும் 1-7-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.
கல்வித்தகுதி:
பி.., பி.டெக். போன்ற பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்களே.
தேர்வு செய்யும் முறை:
சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடை பெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். 7-12-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.மேலும் விரிவான விவரங்களை www .joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.



No comments:

Post a Comment