Monday, 7 November 2016

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு அனல்மின் நிறுவனத்தில் வேலை

.டி.. படித்தவர்களுக்கு அனல்மின் நிறுவனத்தில் வேலை
தேசிய அனல்மின் நிறுவனத்தில் .டி.. படித்தவர் களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 117 பணியிடங்கள் உள்ளன.இது பற்றிய விவரம் வருமாறு:-தேசிய அனல்மின் நிறுவனம் சுருக்கமாக என்.டி.பி.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ..டி. டிரெயினி, அசிஸ்டன்ட் டிரெயினி மற்றும் லேப் அசிஸ்டன்ட் டிரெயினி போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 117 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சத்தீஸ்கர் மாநிலம் லாரா அனல்மின் நிலையத்திலும், மத்திய பிரதேச மாநிலம் கடர்வாரா அனல்மின் நிலையத்திலும் இந்த பணியிடங்கள் உள்ளன. பிரிவு வாரியான பணியிட விவரம் மற்றும் இட ஒதுக்கீடு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-11-2016 தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் .டி.. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். என்.சி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.இது தவிர ஸ்டோர் கீப்பிங், தட்டச்சு பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், பி.எஸ்சி. வேதியியல் படித்தவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, திறமைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள், கட்டண ரசீது ஆகியவை இணைப்பது அவசியம். விண்ணப்பம் 5-12-2016-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை நவம்பர் 5 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கலாம்.



No comments:

Post a Comment