Monday, 21 November 2016

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி | நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டெக்னீசியன் அப்ரடிண்ஸ்ஷிப் டிரெயினிங் (டி..டி.) மற்றும் கிராஜுவேட் அப்ரண்டிஸ்ஷிப் டிரெயினிங் (ஜி..டி.) பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 365 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகளுக்கு 165 இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 200 பணியிடங்களும் உள்ளன.மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. தகுதியின் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பொருத்தமானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். 21-11-2016 முதல் 30-11-2016 வரை ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து, சான்றொப்பம் செய்து தேவையான சான்றுகளை இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 5-12-2016-ந் தேதியாகும்



No comments:

Post a Comment