Monday, 21 November 2016

ராணுவத்தில் முதுநிலை பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கும் பயிற்சி சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராணுவத்தில் அதிகாரி வேலை | ராணுவத்தில் முதுநிலை பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கும் பயிற்சி சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளதுஇந்திய ராணுவத்தில் ஆர்மி எஜூகேசன் கார்ப்ஸ் என்ற படைப்பிரிவு செயல்படுகிறது. குறிப்பிட்ட பயிற்சியின் கீழ் சேர்க்கப்படும் இளம் ராணுவ வீரர்களுக்கு கல்வி போதனையளிக்கும் ஆசிரியர்கள் இந்த படைப்பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள். தற்போது 125-வது சேர்க்கையின் அடிப் படையில் ஜூலை 2017-க்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 23 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1990 முதல் 1-7-1994 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும்.எம்.. ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், புவியியல், உளவியல், இன்டர்நேசனல் ரிலேசன், எம்.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், நில அமைப்பியல், நானோ அறிவியல், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், எம்.சி.., எம்..சைனீஸ் போன்ற முதுநிலை படிப்புகளை படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் இறுதியாக மருத்துவ பரிசோதனைக்கு உட் படுத்தப்படுவார்கள்.விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 7-12-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்



No comments:

Post a Comment