Saturday, 12 November 2016

இல்லந்தோறும் இணையம் திட்டம் நகராட்சிகளில் விரிவாக்கம்: அரசு கேபிள் டி.வி.யுடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

இல்லந்தோறும் இணையம் திட்டம் நகராட்சிகளில் விரிவாக்கம்: அரசு கேபிள் டி.வி.யுடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு | இல்லந்தோறும் இணையம் என்ற திட்டம் நகராட்சிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரசு கேபிள் டி.வி.யுடன் இணைந்து பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கும் தேதியை மேலும் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சியிலும் விரிவு இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ள, 'இண்டர்நெட் சர்வீஸ் புரவைடர்' உரிமத்தை பயன்படுத்தி, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில், அதிவேக அகண்ட இண்டர்நெட் சேவைகளை முதல் கட்டமாக 1.3.16 முதல் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் வழங்கி வருகிறது. இரண்டாம் கட்டமாக, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், "இல்லந்தோறும் இணையம்" திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்துவதற்காக விருப்பம் கோரும் விண்ணப்பங்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து 15.11.16 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நீட்டிப்பு இத்திட்டத்தில் சேர்ந்து இணைய சேவை வழங்குவதற்காக விருப்பம் தெரிவித்து இதுவரை 7 ஆயிரத்து 317 நபர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். இத்திட்டத்தில் சேர்வதற்கு அதிக அளவில் வரவேற்பு இருப்பதாலும், காலஅவகாசத்தை நீட்டிப்பு செய்து தருமாறு விருப்பமுள்ளவர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாலும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பவேண்டிய கடைசி நாள் 30.11.16 என நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, "இல்லந்தோறும் இணையம்" திட்டத்தில் இணைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இணைய சேவை வழங்க விரும்புவோர் 30.11.16 வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு... இத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் கேள்வி பதிலாக இந்தநிறுவனத்தின் இணையதளத்தில் ( www.tactv.in ) 'அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்' என்ற பகுதியில் 14.11.16 முதல் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அதற்கு மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911- தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment