Monday, 28 November 2016

விமான நிறுவனத்தில் 682 அப்ரண்டிஸ் பணிகள்

விமான நிறுவனத்தில் 682 அப்ரண்டிஸ் பணிகள் | இந்திய விமான ஆணையத்தில் பட்டதாரி என்ஜினீயர்கள், டிப்ளமோ என்ஜினீயர், .டி.. அப்ரண்டிஸ் போன்ற பணிகளுக்கு 682 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கிராஜூவேட் மேனேஜ்மென்ட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு 100 இடங்களும், கிராஜூவேட் (நிதி) அப்ரண்டிஸ் பணிக்கு 116 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதர பிரிவு வாரியான பணியிடங்களை இணையதளத்தில் பார்க்கலாம் விண்ணப்பதாரர்கள் 31-12-2016-ந் தேதியில் 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் .பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். எம்.பி.., பி.., பி.டெக் பட்டப்படிப்பு, புள்ளியியல், கணிதம், ஆபரேசன் ரிசர்ச், பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பு மற்றும் .டி.. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க 30-11-2016-ந் தேதி கடைசிநாளாகும். இது பற்றிய விவரங்களை www.aai.aero என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.







No comments:

Post a Comment