Monday, 21 November 2016

ஐ.டி.பி.ஐ வங்கியில் 500 அதிகாரி பணிகள்

ஐ.டி.பி.ஐ வங்கியில் 500 அதிகாரி பணிகள் | பிரபல வங்கியில் 500 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய விவரம் வருமாறு:இந்திய தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி சுருக்கமாக .டி.பி.. என அழைக்கப்படு கிறது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்த வங்கியில் தற்போது எக்சிகியூட்டிவ் அதிகாரி பணிகளுக்கு 500 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
கல்வித்தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-10-2016 தேதியில் 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-10-1991 மற்றும் 10-1-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கட்டணம் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.150-ம், மற்றவர்கள் ரூ.700-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியில் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கவும் மற்றும் கட்டணம் செலுத்தவும் கடைசி நாள் 30-11-2016-ந் தேதியாகும். இதற்கான எழுத்து தேர்வு 6-1-2017 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.id-bi.com என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.



No comments:

Post a Comment