Monday, 21 November 2016

மத்திய பட்டு வாரியத்தில், கள உதவியாளர், இளநிலை பொறியாளர், இளநிலை மொழி பெயர்ப்பாளர், உதவி மேற்பார்வையாளர், சுருக்கெழுத்தர் (கிரேடு-2) பணி | LAST DATE 6.12.2016

பட்டு வாரியத்தில் பணி | மத்திய பட்டு வாரியத்தில், கள உதவியாளர், இளநிலை பொறியாளர், இளநிலை மொழி பெயர்ப்பாளர், உதவி மேற்பார்வையாளர், சுருக்கெழுத்தர் (கிரேடு-2) உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 69 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக மேல் நிலை உதவியாளர் பணிக்கு 36 இடங்களும், கள உதவியாளர் பணிக்கு 23 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். டெக்ஸ்டைல்ஸ், எலக்ட்ரிக்கல் போன்ற டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்புகள், மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், தட்டச்சு சுருக்கெழுத்து படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் www.csb.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 6-12-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். நகல் விண்ணப்பத்தை 9-12-2016-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பார்க்கலாம்.



No comments:

Post a Comment