Monday, 7 November 2016

நிலக்கரி நிறுவனத்தில் 265 பணிகள்

நிலக்கரி நிறுவனத்தில் 265 பணிகள்
நிலக்கரி நிறுவனத்தில் 265 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய விவரம் வருமாறு:-மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று 'நார்தன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட். மத்திய பிரதேச மாநிலம் சிங்ராவ்லி என்ற இடத்தில் செயல்படும் இந்த நிலக்கரி நிறுவனத்தில் தற்போது ஜூனியர் ஓவர்மேன் மற்றும் மைனிங் சர்தார் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மொத்தம் 265 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஜூனியர் ஓவர்மேன் (டி.எஸ். கிரேட்-சி) பணிக்கு 197 பேரும், மைனிங் சர்தார் (டி.எஸ். கிரேடு-சி) பணிக்கு 68 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியானவராகவும், அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் .பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
மைன் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்புடன் ஓவர்மேன் சான்றிதழ் பெற்றவர்கள் ஜூனியர் ஓவர்மேன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சியுடன், மைனிங் சர்தார் சான்றிதழ் பெற்றவர்கள் மைனிங் சர்தார் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், துறை ஊழியர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அதில் தேவையான இடங்களில் புகைப்படங்கள் ஒட்டுவதுடன், குறிப்பிட்ட சான்றிதழ்கள், இணைப்புகளை இணைத்து அனுப்ப வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் General Manager (P/ MP&R), Room No. 15, Personnel Department, NCL HQ, Singrauli, MP 486 889 என்ற முகவரிக்கு 26-11-2016-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.இது பற்றிய விரிவான விவரத்தை www.nclcil.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். 



No comments:

Post a Comment