Tuesday, 15 November 2016

சார்ஜாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு நவ.16,17 தேதிகளில் நேர்முகத்தேர்வு

சார்ஜாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு நவ.16,17 தேதிகளில் நேர்முகத்தேர்வு | சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனம் கோரியுள்ள சிவில் மேற் பார்வையாளர், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட பணிகளுக்கு தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் வரும் 16,17 தேதிகளில் நேர்முகத் தேர்வு நடக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தின் உள்வடிவமைப்பு பிரிவுக்கு, டிப்ளமோ தேர்ச்சி பெற்ற சிவில் மேற்பார்வையாளர்கள் தேவைப்படுகின்றனர். 30 முதல் 35 வயதுக்குட்பட்ட 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். மாத ஊதிய மாக ரூ.63 ஆயிரத்து 875 முதல், ரூ.82 ஆயிரத்து 125 வரை அளிக் கப்படும். மேலும், 2 ஆண்டு ஐடிஐ சான்றிதழ் பெற்ற எலெக்ட்ரீ ஷியன்கள், எச்விஏசி டெக்னீ ஷியன்கள், அலங்கார பொருட் கள் மற்றும் விற்பனையகத்துக்கு பொருத்துதல் தொடர்பான பணி களில் அனுபவம் உள்ள ஸ்டீல் ஃபேப்ரிகேட்டர்கள் தேவைப்படு கின்றனர். இதில் எலெக்ட்ரீஷியன் களுக்கு மாத ஊதியம் ரூ.36 ஆயிரத்து 500 முதல் ரூ.40 ஆயி ரத்து 150 வரை, ஏசி டெக்னீஷி யன்களுக்கு ரூ.27 ஆயிரத்து 375 முதல் ரூ.32 ஆயிரத்து 850 வரை யும், ஸ்டீல் ஃபேப்ரிகேட்டர் களுக்கு ரூ.23 ஆயிரத்து 725 முதல் ரூ.27 ஆயிரத்து 375 வரையும் வழங்கப் படும். மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ சான்றிதழ்களுடன் கடைகள், சில்லறை விற்பனை யகங்கள், உணவகங்கள் ஆகிய வற்றில் உள் அலங்கார பொருத் துதல் வேலைகளில் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ள ஜிப்சம், மரத்தச்சர்கள், மர பெயின்டர்கள், சுவர், கான்கிரீட் பெயின்டர்கள், டைல்ஸ் கொத்தனார்களும் தேவைப்படுகின்றனர். இவர்க ளுக்கு ரூ.23 ஆயிரத்து 725 முதல் ரூ.27 ஆயிரத்து 325 வரை வழங்கப் படுகிறது. தேர்வு செய்யப் படுபவர் களுக்கு இலவச இருப் பிடம் மற்றும் அந்நாட்டின் சட்ட திட்டத்துக்குட்பட்ட இதர சலுகை கள் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் தங்கள் சுய விவரம் அடங்கிய விண்ணப் பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ் போர்ட் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட 3 புகைப்படத்துடன் நவம்பர் 16,17 தேதிகளில், கிண்டி, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வுக்கு காலை 9 மணிக்குள் நேரில் வர வேண்டும். மேலும் விவரங்கள் அறிய 044- 22505886,22502267,22500417 எண்களில் அறிந்து கொள்ளலாம்.



No comments:

Post a Comment