Monday, 7 November 2016

கடலோர காவல்படையில் வேலை வாய்ப்பு-10-ம் வகுப்பு படிப்பு தகுதி

கடலோர காவல்படையில் வேலை வாய்ப்பு-10-ம் வகுப்பு படிப்பு தகுதி
கடலோர காவல் படையில் 10-ம் வகுப்பு படித்தவர்கள் 'நேவிக்' பணியில் சேர்க்கப்படுகிறார்கள்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-'இந்தியன் கோஸ்ட் கார்டு' எனப்படும் இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். கடற்கரை மற்றும் கடல் எல்லை பாதுகாப்பு பணிகளை இந்த படைப் பிரிவு கவனித்து வருகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் நேவிக் (குக், ஸ்டூவார்டு) பணிகளுக்கு ஆள் சேர்க்கை நடக்க இருக்கிறது. இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 1-4-2017 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 1-4-1995 மற்றும் 31-3-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். .பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி:
10-ம் வகுப்பு படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு வீரர்களுக்கு சலுகை உண்டு.
பணியின் விவரம்:
சமையல் பொருட்களை கணக்கிடல் மற்றும் உணவு தயாரித்தல் பணிகள் வழங்கப்படும். நிறுவனத்தை திறம்பட நடத்துவதற்காக இதர பணிகளும் அவர்களுக்கு ஒதுக்கப்படும்.
ஸ்டூவார்டு பணியாளர்கள், அதி காரிகளுக்கு மெஸ்ஸில் உணவு பரிமாற வேண்டும். நிதி கணக்கிடல், ஸ்டோர் பராமரித்தல் உள்ளிட்ட இதர பணிகளையும் கவனிக்க வேண்டும்.
உடல்தகுதி:
விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல்தகுதியை கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடனும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்கள் தேர்வு முறைகளுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்து தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தபால் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதி விறக்கம் செய்து நிரப்புவதுடன், தேவையான சான்றுகள் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 15-11-2016-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.விண்ணப்பங்களை பதிவிறக்கவும், மேலும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் www.joinindiancoastguard.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.



No comments:

Post a Comment