Monday, 31 October 2016

பொதுத்துறை நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை

பொதுத்துறை நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை
மத்திய அரசு நிறுவனத்தில் என்ஜினீயர் களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 153 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.இது பற்றிய விவரம் வருமாறு:-பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்துஸ்தான் காப்பர் லிமிடெட். செம்புத் தாது வள நிறுவனமான இது சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. மினி ரத்னா அந்தஸ்து பெற்ற இந்த நிறுவனத்தில் தற்போது எக்சிகியூட்டிவ் தரத்திலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 153 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.மைனிங், ஜியாலஜி, சர்வே, மெட்டலர்ஜி, கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், இண்டஸ்ட்ரியல், ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட், மெடிக்கல் அண்ட் ஹெல்த் சர்வீசஸ், நிதி, எச்.ஆர்., சட்டம், மெட்டீரியல்ஸ் அண்ட் காண்ட்ராக்ட்ஸ், மார்க்கெட்டிங், சேப்டி, என்விரான்மென்ட் மேனேஜ்மென்ட் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.இவை டெபுடி ஜெனரல் மேனேஜர், சீப் மேனேஜர், சீனியர் மேனேஜர், மேனேஜர், டெபுடி மேனேஜர், அசிஸ்டன்ட் மேனேஜர் தரத்திலான அதிகாரி பணியிடங்களாகும். பிரிவு வாரியான மற்றும் பணி வாரியான காலி யிடங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 54 வயதுடையவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், .பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.
கல்வித் தகுதி:
பணியிடங்கள் உள்ள பிரிவு சார்ந்த பி.., பி.டெக். பட்டப்படிப்புகள், எச்.ஆர்., சட்டப் படிப்பு, எம்.பி.., மார்க்கெட்டிங் போன்ற படிப்பு களை படித்தவர்களுக்கு பணி உள்ளது.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்:
பொது மற்றும் .பி.சி. பிரிவினர் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போது மானது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 30-11-2016-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.hidustancoper.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.



No comments:

Post a Comment