Tuesday, 4 October 2016

காகித ஆலையில் வேலை

காகித ஆலையில் வேலை
தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் சுருக்கமாக டி.என்.பி.எல். என அழைக்கப்படுகிறது. கரூரில் செயல்படும் இந்த நிறுவனத்தில் பட்டதாரி என்ஜினீயர் டிரெயினி பணிக்கு 29 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-9-2016 தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பணியிடங்கள் உள்ள பாடப்பிரிவில் பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சுய விவரப் பட்டியல் அடங்கிய விண்ணப்பத்தை General Manager (HR), Tamil Nadu Newsprint and Papers Limited, Kagithapuram 639 136, Karur District, Tamil Nadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 6-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.
மற்றொரு அறிவிப்பின்படி டிரெயினி கெமிக்கல் (செமி ஸ்கில்டு குரூப்-சி) பணிக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார் கள். பல்ப் அண்ட் பேப்பர் டெக்னாலஜி, பேப்பர் டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், கெமிக்கல் டெக்னாலஜி போன்ற டிப்ளமோ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி 7-10-2016-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்ப மாதிரி மற்றும் விவரங்களை www.tnpl.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment