Monday, 17 October 2016

அழைப்பு உங்களுக்குத்தான்!

அழைப்பு உங்களுக்குத்தான்!

எலக்ட்ரானிக் நிறுவனம் : நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி..எல்.) தற்போது இந்த நிறுவனத்தில் என்ஜினீயர் பணிகளுக்கு 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறிப்பிட்ட பிரிவுகளில் பி.., பி.டெக் படித்தவர்களுக்கு பணி யிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர் 1-10-2016 தேதியில் 25 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர் கள் 23-10-2016-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

மற்றொரு அறிவிப்பின்படி என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் டிரெயினி, டெக்னீசியன், ஜூனியர் அசிஸ்டன்ட் போன்ற பணிகளுக்கு 63 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 28 வயதுக்கு உட்பட்ட, டிப்ளமோ என்ஜினீயர்கள், .டி.. படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 19-10-2016-ந் தேதியாகும். இவை பற்றிய விரிவான விவரங்களை www.belindia.com என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

விமானப்படை : விமானப்படைத் தளங்களில் 'குரூப்-சி' பணிகளுக்கு 53 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், அரியானா, அலகாபாத், மத்தியபிரதேசம் போன்ற இடங்களில் பணிகள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 27 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணி உள்ளது. இது பற்றிய அறிவிப்பு எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடையும்படி விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை அக்டோபர் 8-14 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கலாம்.

யூ.பி.எஸ்.சி.: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) பல துறைகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிகளுக்கு 23 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விவரங்களை www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-10-2016

என்.பி.சி..எல். : அணுசக்தி கழக நிறுவனத்தில் டெக்னிக்கல் ஆபீசர், சயின்டிபிக் ஆபீசர் போன்ற பணிகளுக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் பட்டப்படிப்பு, முதுநிலை படிப்புடன், பணியனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.npcilcareers.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-10-2016-ந் தேதியாகும்.

விமான நிறுவனம் : ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ...டி.எஸ்.எல். நிறுவனத்தில் ஏர்போர்ட் மேனேஜர், அசிஸ்டன்ட் ஏர்போர்ட் மேனேஜர் போன்ற பணிகளுக்கு 23 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரங்களை www.ai-r-i-n-d-ia.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பம், 24-10-2016-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்




No comments:

Post a Comment