Tuesday, 25 October 2016

இந்த வார வேலைவாய்ப்பு ...உங்களுக்காக ...

இந்த வார வேலைவாய்ப்பு
கடற்படை :
இந்திய கடற்படையின் ஆயுதக் கிடங்கில் சார்ஜ்மேன், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு 47 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அறிவியல் பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை அக்டோபர் 15- 21 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

காகித ஆலை:
இந்துஸ்தான் நியூஸ் பிரின்ட் லிமிடெட் நிறுவனத்தில் அட்டன்ட், பயர்மேன் போன்ற பணிகளுக்கு 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் கள், .டி.. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை www.hnlonline.com இணையதளத்தில் பார்த்துவிட்டு, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை 31-10-2016-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

டி.என்.பி.எல்.:
தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் (டி.என்.பி.எல்.) செமிஸ்கில்டு பணியிடங்களுக்கு 38 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், சானிடரி இன்ஸ்பெக்டர் டிப்ளமோ படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு இதில் பணி வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விவரங்களை www.tnpl.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை 31-10-2016-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

தொலைத்தொடர்பு துறை:
மத்திய தொலைத் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தகவல் தொடர்பு மற்றும் .டி. பிரிவின் டெல்லி மண்டலத்தில் அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், சீனியர் அக்கவுண்டன்ட், ஜூனியர் அக்கவுண்டன்ட் போன்ற பணிகளுக்கு 46 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரங்களை www.prccadelhi.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 31-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

சுற்றுலாத் துறை:
இந்திய சுற்றுலா வளர்ச்சி கழக நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர், டெபுடி ஜெனரல் மேனேஜர், மேனேஜர் போன்ற அதிகாரி பணிகளுக்கு 9 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டப்படிப்பு, முதுநிலைப் படிப்பு மற்றும் குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.theeshokgroup.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 2-11-2016-ந் தேதி.

அலிகார் பல்கலைக்கழகம் :
மத்திய பல்லைக்கழகங்களில் ஒன்றான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிகள் உள்ளன. இவை தவிர அதிகாரி பணிகள், அலுவலக பணியிடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரங்களை www.amuregistrar.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 27-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

விமான நிறுவனம் :
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை அமைப்பான ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிமெட் (...எஸ்.எல்.) நிறுவனத்தில் அசிஸ்டன்ட் சூப்பிரவைசர் பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை, ஐதராபாத் ...எஸ்.எல். நிறுவன முகவரிக்கு 31-10-2016-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களை www.airindia.com என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

.டி.. :
தொலைத் தொடர்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனமான .டி.. லிமிடெட் நிறுவனம் பெங்களூரில் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் என்ஜினீயரி (கிரேடு-2) போன்ற பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.., பி.டெக், பட்டப்படிப்புடன் முதுநிலை டிப்ளமோ அல்லது டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விவரங்களை www.itiltdlindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 31-10-2016-ந் தேதி.

அலுமினிய நிறுவனம்:
நால்கோ எனப்படும் பொதுறை அலுமினிய நிறுவனத்தில் லேப் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 8 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரங்களை www.nalcoindia.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசிநாள் : 29-10-2016-ந் தேதி.

No comments:

Post a Comment