Tuesday, 4 October 2016

அழைப்பு உங்களுக்குத்தான்

அழைப்பு உங்களுக்குத்தான்
ஓ.என்.ஜி.சி. : எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அசிஸ்டன்ட் டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் அசிஸ்டன்ட் போன்ற பணிகளுக்கு 32 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு மற்றும் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை www.ongcindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 10-10-2016-ந் தேதியாகும்.
ஏ.ஏ.எஸ்.எல். : ஏர்இந்தியா விமான நிறுவனத்தின் துணை அமைப்பான ஏர்லைன் அலைடு சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் என்ஜினீயர் (டெக்னிக்கல் சர்வீசஸ்) பணிக்கு 40 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 35 வயதுக்கு உட்பட்ட , பி.இ., பி.டெக் படித்த விண்ணப்பதாரர்களுக்கு பணிகள் உள்ளன. 3 ஆண்டு பணி அனுபவம் தேவை. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், 13-10-2016 முதல் 15-10-2016 வரை புதுடெல்லியில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். விண்ணப்பத்தை www.airindia.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி, தேவையான சான்றுகளுடன் நேரில் செல்ல வேண்டும். விரிவான விவரங்களையும் நிறுவனத்தின் இணைய பக்கத்தில் பார்க்கலாம்.
இந்தியன் ஆயில் : இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புருனி சுத்திகரிப்பு நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 46 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரங்களை www.iocrefrecruit.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, 15-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.


No comments:

Post a Comment