Tuesday, 25 October 2016

காப்பீட்டு நிறுவனத்தில் அதிகாரி பணி

காப்பீட்டு நிறுவனத்தில் அதிகாரி பணி

காப்பீட்டு நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இது பற்றிய விவரம் வருமாறு:பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி (ஜெனரல்- ஸ்கேல்-1) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியாக பொது பிரிவுக்கு 158 இடங்களும், .பி.சி. பிரிவுக்கு 84 இடங்களும், எஸ்.சி. பிரிவுக்கு 43 இடங்களும், எஸ்.டி. பிரிவுக்கு 15 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-10-2016 தேதியில் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-10-1986 மற்றும் 1-10-1995 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், .பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப் படும்.
கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு/ முதுநிலை படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.
தேர்வுசெய்யும் முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு, பேஸ்-1, பேஸ்-2 என இரு நிலைகளாக நடத்தப்படுகிறது.
கட்டணம் :
பொது மற்றும் .பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், .பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 1-11-2016-ந் தேதிவரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை பார்க்கவும் www.newindia.co.in என்ற இணைய தள முகவரியைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment