Tuesday, 4 October 2016

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 550 நர்ஸ் பணியிடங்கள்

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 550 நர்ஸ் பணியிடங்கள்
எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 550 'ஸ்டாப் நர்ஸ்' பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் ஸ்டாப் நர்ஸ் (கிரேடு -2) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.மொத்தம் 550 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவுக்கு 279 இடங்களும், ஓ.பி.சி. பிரிவுக்கு 148 இடங்களும், எஸ்.சி. பிரிவுக்கு 82 இடங்களும், எஸ்.டி. பிரிவுக்கு 41 இடங்களும் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 23-10-2016 தேதியில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
மெட்ரிக்குலேசன் அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று, ஜெனரல் நர்சிங், மிட்வைப், மேல் நர்ஸ் போன்ற சான்றிதழ் படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தவர் களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகிய முறைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 23-10-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இறுதியில் சமர்ப்பித்த பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


No comments:

Post a Comment