Tuesday, 4 October 2016

மத்திய அரசு துறைகளில் என்ஜினீயரிங் சேவை பணிகளுக்கான தேர்வு 440 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது

மத்திய அரசு துறைகளில் என்ஜினீயரிங் சேவை பணிகளுக்கான தேர்வு 440 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது
மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் என்ஜினீயரிங் தொடர்பான பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 440 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு அதிகாரி பணியிடங்களை தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. தற்போது என்ஜினீயரிங் தொடர்பான பணியிடங்களை நடத்த 'என்ஜினீயரிங் சர்வீசஸ் எக்ஸாம்-2017' எனும் தேர்வை அறிவித்துள்ளது. இந்த தேர்வின் மூலம் உத்தேசமாக 440 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ரெயில்வே, ரெயில்வே ஸ்டோர்கள், இந்திய ராணுவ தொழிற்சாலைகள், மத்திய சாலைப் பணிகளுக்கான பிரிவு, நில அளவைத்துறை, எல்லையோர சாலைப் பணிகள் துறை, பாதுகாப்பு சேவைப் பணிகள், கடற்படை, மிலிடரி என்ஜினீயரிங் சேவைப் பணிகள் சர்வேயர் மற்றும் மத்திய பொது என்ஜினீயரிங் சேவைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-1-2017 தேதியில் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1987 மற்றும் 1-1-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன்ஸ் ஆகியவை சார்ந்த என்ஜினீயரிங் பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட பணிகளுக்கு அவசியமான உடல்தகுதி பெற்றிருப்பது அவசியம். இவை பற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
கட்டணம் :
பெண் விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் எந்த கட்டணமும் செலுத்த வேண்டிய தில்லை. மற்றவர்கள் ரூ.200 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 26-10-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.upsconline.nic.in மற்றும் www.upsc.gov.in ஆகிய விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment