Tuesday, 25 October 2016

கியாஸ் நிறுவனத்தில் 233 பணியிடங்கள்-டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்

கியாஸ் நிறுவனத்தில் 233 பணியிடங்கள்-டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய கியாஸ் நிறுவனத்தில் 233 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர் கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம் சுருக்கமாக (கெயில்- GAIL ), என்று அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் புதுடெல்லி தலைமையகத்தில் இருந்து ஜூனியர் என்ஜினீயர், அக்கவுண்டன்ட், சூப்பிரண்டென்ட், கெமிஸ்ட், போர்மேன், அசிஸ்டன்ட், அக்கவுண்ட்ஸ் அசிஸ்டன்ட், மார்க்கெட்டிங் அசிஸ்டன்ட், போர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 233 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவுக்கு 119 இடங்களும், .பி.சி. பிரிவினருக்கு 47 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 28 இடங்களும் உள்ளன. பணிப் பிரிவு வாரியான காலியிடங்கள் விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
ஒவ்வொரு பணிக்கும் வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். இதர பணியிடங்களில் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
கல்வித் தகுதி:
டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், சி.., .சி.டபுள்யு.., எம்.எஸ்சி. வேதியியல் மற்றும் இதர பட்டப்படிப்புகளை படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி மற்றும் சரியான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.
கட்டணம்:
விருப்பம் உள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 5-11-2016-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து சொந்த உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளவும்.விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.gailonline.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment