Monday, 17 October 2016

எல்லையோர சாலை நிறுவனத்தில் 2176 வேலைவாய்ப்புகள்

எல்லையோர சாலை நிறுவனத்தில் 2176 வேலைவாய்ப்புகள்

எல்லையோர சாலை நிறுவனத்தில் 2 ஆயிரத்து 176 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது பற்றிய விவரம் வருமாறு:-மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் 'பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேசன்' எனப்படும் எல்லையோர சாலை நிறுவனம் என்ற அமைப்பு செயல்படுகிறது. நாட்டின் எல்லையோர சாலைகளை அமைத்தல், பராமரித்தல், செப்பனிடுதல் போன்ற பணிகளை இந்த அமைப்பு கவனிக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தின் பல்வேறு பணிகளுக்கு 2 ஆயிரத்து 176 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.டிரைவர், மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன், ஸ்டோர் சூப்பிரவைசர், நர்சிங் சூப்பிரவைசர், டைப்பிஸ்ட், வெல்டர், ரோட்ரோலர் ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்கள் இதில் உள்ளன. அதிகபட்சமாக வெகிகிள் மெக்கானிக் பணிக்கு 133 இடங்களும், மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் பணிக்கு 203 இடங்களும், டிரைவர் என்ஜின் ஸ்டாட்டிக் பணிக்கு 384 இடங்களும், டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் பணிக்கு 475 இடங்களும், சமையலர் பணிக்கு 330 இடங்களும், மாசன் பணிக்கு 154 இடங்களும், ஆபரேட்டர் பணிக்கு 139 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதர பணிகளுக்கான இடங்களின் எண்ணிக்கையை இணையதளத்தில் பார்க்கலாம்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-
வயது வரம்பு:
27 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், .பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், இன்னும் ஒதுக்கீடு பெறுவோருக்கு அரசு விதிகளின் படியும் வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்ப அவகாச காலத்தின் இறுதிநாளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.
கல்வித்தகுதி:
பிளஸ்-2 படிப்புடன் 2 ஆண்டு நர்சிங் படிப்பு, பட்டப்படிப்புடன் தட்டச்சுப் பயிற்சி, பெற்றவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிகளுக்கான சரியான வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியை இணையதளத் தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
உடல் உறுதித்திறன் தேர்வு, செய்முறைத் தேர்வு, திறமைத் தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவற்றில் அந்தந்த பணிக்கு அவசியமான தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
பொது மற்றும் .பி.சி. பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் புகைப்படம் மற்றும் தேவையான சான்றுகள் இணைப்பது அவசியம். அஞ்சல் முகப்பில் விண்ணப்பதாரரின் பணி மற்றும் பிரிவு, மதிப்பெண் சதவீதம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். விண்ணப்பம் Commandant, GREF Centre, Dighi Camp, Pune 411 015 என்ற முகவரிக்கு அறிவிப்பில் இருந்து 45 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு 10-10-2016-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்




No comments:

Post a Comment