Saturday, 8 October 2016

தமிழ்நாடு கிடங்கு கழகத்தில் பணி: 13க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு கிடங்கு கழகத்தில் பணி: 13க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிடங்கு கழகத்தில் (Tamilnadu Warehousing Corporation) நிரப்பப்பட உள்ள மேலாண்மை பயிற்சி மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: மேனேஜ்மென்ட் டிரெய்னி - 37
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பெர்சானல் மேனேஜ்மென்ட், மார்க்கெடிங், ஐ.ஆர்.,அல்லது எச்.ஆர்., பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
பதவி: டெக்னிகல் பிரிவு மேனேஜ்மென்ட் டிரெய்னி
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாயத்துறையில் முதுகலைப்பட்டம் அல்லது பயோ-கெமிஸ்ட்ரி அல்லது உயிரியல் அல்லது எண்டமாலஜி ஆகிய ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: உதவி பொறியாளர் (சிவில்)
காலியிடங்கள்: 15
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: சூப்ரண்டென்ட்
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 300
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாயத்துறையில் பட்டம் அல்லது உயிரியல் அல்லது வேதியியல் அல்லது பயோ-கெமிஸ்ட்ரி பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: ஸ்டெனோகிராபர்
காலியிடங்கள்: 08
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400.
விண்ணப்பிக்கும் முறை: www.tnwc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.10.2016


No comments:

Post a Comment