Tuesday, 6 September 2016

நீர்வளத்துறையில் பணிகள்

நீர்வளத்துறையில் பணிகள்
மத்திய நீர்வளத்துறையில் உதவியாளர் பணிக்கு 111 இடங்கள் நிரப்பப்படுகிறது. இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவுக்கு 56 இடங்களும், ஓ.பி.சி. பிரிவுக்கு 34 இடங்களும், எஸ்.சி. பிரிவுக்கு 13 இடங்களும், எஸ்.டி. பிரிவுக்கு 8 இடங்களும் உள்ளன. பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் எந்த இந்திய பகுதியிலும் பணிக்கு நியமிக்கப்படலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப அவகாச காலத்தின் இறுதி நாளில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு சலுகை அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். ஏ4 வெள்ளைக் காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரித்து, விவரங்களை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகளை இணைப்பது அவசியம். விண்ணப்பங்கள் புதுடெல்லி நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலக முகவரிக்கு சென்றடைய வேண்டும்.
இது பற்றிய கூடுதல் விவரங்களை www.cwc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment