Tuesday, 27 September 2016

கப்பல் தளத்தில் பயிற்சிப் பணி

கப்பல் தளத்தில் பயிற்சிப் பணி
மும்பை நேவல் டாக்யார்டு கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 315 பணியிடங்கள் உள்ளன. பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், டீசல் மெக்கானிக் உள்ளிட்ட 22 துறைகளில் பணியிடங்கள் இருக்கின்றன. துறை வாரியான பணியிடங்கள் எண்ணிக்கையை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படிப்பில் 65 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பதாரர்கள் 1-4-1996 மற்றும் 31-3-2003 தேதி ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் பெற்றிருக்க வேண்டும். பார்வைத்திறன் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி, எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை, நிரப்பி சாதாரண தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம், PO Box No.10035 FPO, Mumbai 400001 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 14-10-2016-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை செப்டம்பர் 17-23 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment