Friday, 2 September 2016

கோபி தாலுகாவில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோபி தாலுகாவில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கோபி தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோபி வட்டாட்சியர் குமரேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கோபி தாலுகா, வாணிப்புத்தூர் உள்வட்டத்தில், நஞ்சைதுறையம்பாளையம் மற்றும் நஞ்சை புளியம்பட்டி கிராமத்தில் 2 கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்படும் பட்டியல் மற்றும் பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.இந்தப் பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்த பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தில் ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் தங்களது கல்விச்சான்று, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு அட்டை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் தங்களது முகவரி, பிறந்த தேதி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை கோபி வட்டாட்சியருக்கு செப்டம்பர் 6-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment