Tuesday, 6 September 2016

சேர்க்கை

சேர்க்கை
இந்திய கடற்படையில் மாலுமி பணிக்கு நேரடி ஆள்சேர்க்கை நடைபெறுகிறது.
இது பற்றிய விவரம் வருமாறு:-இந்திய கடற்படை பணியில் சேருவது இளைஞர் களின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாக உள்ளது. தற்போது மாலுமி பணிக்கு நேரடியாக ஆள்சேர்க்கும் அறிவிப்பு (எஸ்.எஸ்.ஆர்.-01/2017) வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இதற்கு கீழ்க்காணும் தகுதிகளை பெற்றிருப்பது அவசியம். அந்த தகுதி விவரங்களை இனி தெரிந்து கொள்ளலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-2-1996 மற்றும் 31-1-2000 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.
கல்வித்தகுதி:
கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய அறிவியல் பிரிவில் பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, உடல்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆள்சேர்ப்பு நடைபெறும்.
எழுத்து தேர்வு கொள்குறி வகையில் இருக்கும். அறிவியல், கணிதம், பொது அறிவு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய வினாக்கள் இடம் பெறும். உடல்தகுதி மாலுமி பணிக்கு அனுமதிக்கப்பட்ட தற்போதைய வரைமுறைப்படி உள்ளதா என பரிசோதிக்கப்படும்.
கலந்து கொள்ளும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் 8.9.2016 அன்று நடைபெறும் இதற்கான ஆள்சேர்க்கை முகாமில் பங்கேற்கலாம். ஆள்சேர்ப்பு நடைமுறைகள் பற்றி www.joinindiannavy.gov.in என்ற இணையதள முக வரியில் பார்க்கலாம். ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்கள் தேவையான அசல் சான்றுகள் மற்றும் சுயசான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் 7 வண்ண புகைப் படங்கள், சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை, குடியிருப்பு சான்றிதழ் ஆகியவையும் அவசியம்.ஆள்சேர்க்கை காலை 7 மணிக்கு தொடங்கிவிடும் என்பதால் தயாராக செல்ல வேண்டும். முகாம் நடைபெறும் முகவரி வருமாறு: இந்தியன் நேவல் ஷிப் அடையார், C/o நேவி அலுவலகம், போர்ட் காம்ப்ளக்ஸ், ராஜாஜி ரோடு, சென்னை 600009. விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment