Tuesday, 6 September 2016

அழைப்பு உங்களுக்குத்தான்

அழைப்பு உங்களுக்குத்தான்
அம்பேத்கார் பல்கலைக்கழகம் :
தமிழ்நாடு அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், கிளார்க், ஸ்டெனோகிராபர், டெக்னிக்கல் ஆபீசர் உள்ளிட்ட பணி யிடங்களுக்கு 24 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 8-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, தட்டச்சு மற்றும் கணினி படித்தவர் களுக்கு பணிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பம் 16-9-2016-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ரூ.500 கட்டண டி.டி. இணைத்து அனுப்ப வேண்டும்.
மீன்வளர்ச்சி துறை :
தமிழ்நாடு மீன்கள் வளர்ச்சி கழக நிறுவனத்தில் (TNFDC) உதவி மேலாளர் பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மீன்வள அறிவியல் டிப்ளமோ படிப்பு படித்த 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.100 கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை 14-9-2016-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். இது பற்றிய விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
நிதி நிறுவனம் :
கனரா வங்கியின் துணை நிதி நிறுவனமான ஹேன்பின் கோம்ஸ் நிறுவனத்தில் சிறப்பு அதிகாரி பணிகளுக்கு 7 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சி.ஏ., சட்டம், பி.இ., பி.டெக், எம்.சி.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை www.canfinhomes.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8-9-2016-ந் தேதி.
உர நிறுவனம் :
திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தில் (FACT) டெக்னீசியன் பணிக்கு 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வேதியியல் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 20-9-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது பற்றிய விவரங்களை www.fact.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
பண அச்சகம் :
கோசங்காபாத்தில் செயல்படும் செக்யூரிட்டி பேப்பர் மில் (எஸ்.பி.எம்.) எனப்படும் பண அச்சகத்தில் சூப்பிரவைசர் மற்றும் ஜூனியர் டெக்னிக்கல் பாய்லர் போன்ற பணிகளுக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் www.spmhoshangabad.spmcil.com என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். 19-9-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.


No comments:

Post a Comment