Tuesday, 20 September 2016

‘கேட்’ தேர்வு அடிப்படையில் என்ஜினீயர்களுக்கு வேலை

'கேட்' தேர்வு அடிப்படையில் என்ஜினீயர்களுக்கு வேலை
கேட் தேர்வின் அடிப் படையில் மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கி உள்ளன.
இந்துஸ்தான் பெட்ரோலியம்:
எச்.பி.சி.எல். என அழைக்கப்படும் இந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனம் மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமாகும். உலக அளவில் சிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில் 21.3 சதவீத சந்தை மதிப்புடன் இடம் பெற்ற பொதுத்துறை நிறுவனம் இதுவாகும். கடந்த நிதியாண்டில் வரிசெலுத்தியது போக 3 ஆயிரத்து 863 கோடி நிகரலாபம் ஈட்டி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆண்டைக்காட்டிலும் இது 41 சதவீத வளர்ச்சி ஆகும்.
முன்னணி நிறுவனமான இதில் தற்போது 2017 கேட் தேர்வின் அடிப்படையில் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல் போன்ற என்ஜினீயரிங் பிரிவுகளில் படித்து, கேட் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு பணிகள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 30-6-2017 தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 30-6-1992க்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படு கிறது.
விருப்பம் உள்ளவர்கள் நடக்க இருக்கும் கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவெண்ணுடன், எச்.பி.சி.எல். இணையதளத்திற்கு சென்று இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10-1-2017 முதல் 10-2-2017 வரை ஆன்லைன் விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் ரூ.265 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த கட்டணம் கிடையாது.
கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க www.gate.iitr.ernet.in என்ற இணையதளத்தையும், எச்.பி.சி.எல். பணிகளுக்கு விண்ணப்பிக்க www.hpclcareers.com மற்றும் www.hindustanpetroleum.com ஆகிய இணையதள பக்கங்களையும் பார்க்கலாம்.
பாரத் பெட்ரோலியம்:
பாரத் பெட்ரோலிய கழக நிறுவனம் (பி.பி.சி.எல்.) நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெயினி பணியிடங்கள் கேட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங்/ பி.டெக் படித்து, கேட் தேர்வு எழுதுபவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 6-1-2017 முதல் 10-2-2017 வரை இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.
இது பற்றிய விவரங்களை www.bharatpetroleum.com என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment