Tuesday, 6 September 2016

நபார்டு வங்கியில் வேலை

நபார்டு வங்கியில் வேலை
இந்திய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சுருக்கமாக 'நபார்டு வங்கி' என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் டெவலப்மென்ட் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 85 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியாக பொது பிரிவு - 56 இடங்கள், ஓ.பி.சி. - 10 இடங்கள், எஸ்.சி. - 12 இடங்கள், எஸ்.டி. - 7 இடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 31-7-2016 தேதியில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். அதாவது 1-8-1981 மற்றும் 31-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் 50 சதவீதத்திற்கு குறையாத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு எழுத்து தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.450 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-9-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விரிவான விவரங்களை www.nabard.org என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.


No comments:

Post a Comment