Tuesday, 6 September 2016

மருத்துவ உதவி பேராசிரியர் வேலை

மருத்துவ உதவி பேராசிரியர் வேலை
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான (யூ.பி.எஸ்.சி.) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உதவி இயக்குனர், ஸ்பெஷலிஸ்ட் (உதவி பேராசிரியர்) உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 127 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். இதில் அதிகபட்சமாக உதவி பேராசிரியர் (ரேடியோ டயக்னாசிஸ்) பணிக்கு - 33 இடங்கள், உதவி பேராசிரியர் நியூராலஜி - 24 இடங்கள், நியூரோ சர்ஜரி - 23 இடங்கள், கார்டியாலஜி - 12 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப் படும்.
அனிமல் ஹஸ்பண்டரி, வெட்னரி சயின்ஸ், டெய்ரி மற்றும் அக்ரிகல்சர், ஏரோனாட்டிக்கல், முதுநிலை சட்டப்படிப்பு, எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 15-9-2016-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.


No comments:

Post a Comment